• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மயிலாப்பூர் டாஸ்மாக் கடையில் 15 லட்ச ரூபாய் கொள்ளை!

மயிலாப்பூர் டாஸ்மாக் கடையில் 15 லட்ச ரூபாய் கொள்ளை!

கோப்புப்படம்

கோப்புப்படம்

முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

  • Share this:
சென்னை மயிலாப்பூர் பல்லக்கு மாநகரில் அரசு மதுபானக் கடை ஒன்று அமைந்துள்ளது. நேற்று காலை  மதுபானக் கடையின் கண்காணிப்பாளர் சங்கர் கடையைத் திறந்திருக்கிறார். அதன் பின்பக்கம் இருந்த ஜன்னலின் கம்பி உடைக்கப்பட்டிருந்துள்ளது. அத்தோடு, கடையில் வைத்திருந்த விற்பனை பணம் 15 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததையும் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

ஜன்னல் கம்பியை உடைத்ததன் வழியாக உள்ளே சென்று 15 லட்ச ரூபாய் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர் என்பது அறிந்து, சங்கர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். அதன் அடிப்படையில், கடையிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவி கேமராக்களில் இருவர் முகமூடி அணிந்து செல்வது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: