காரைக்காலில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள சாராயம் பதுக்கல் -காரைக்கால் போலீஸார் பறிமுதல்

காரைக்காலில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள சாராயம் பதுக்கல் -காரைக்கால் போலீஸார் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட சாராயம்

சாராய கடையின் குடோன் மட்டுமன்றி கூடுதலாக ஒரு குடோன் அமைத்து சாராய பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

  • Share this:
காரைக்காலில் இருந்து தமிழகப் பகுதிக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் மதிப்புள்ள சாராயம் மற்றும் 3 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்ததுடன் கடை மேலாளரை கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காரைக்கால் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் மற்றும் சிறப்பு அதிரடி பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோட்டுச்சேரி அடுத்த கொன்னக்காவலி கிராமம் 1ம் எண் சாராய கடையில் சட்டவிரோதமாக சாராயம் கேன்களில் பதுக்கி வைத்திருப்பதாக வந்த ரகசிய தகவலை தொடர்ந்து சிறப்பு அதிரடி பிரிவு எஸ்.ஐ பிரவீன் தலைமையிலான போலீசார் சம்மந்தப்பட்ட சாராய கடைக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருவர் தப்பி ஓடியுள்ளனர். சாராய கடையின் குடோன் மட்டுமன்றி கூடுதலாக ஒரு குடோன் அமைத்து அதில் பெரிய சாராய கேன்கள் 20க்கும் மேற்பட்ட மூட்டைகளில் சாராய பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

கோட்டுச்சேரி போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ததும் பதுக்கி வைத்திருந்த சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள சாராயம் மற்றும் 3 இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றியதுடன் சாராய கடை மேலாளர் கணேசன் என்ற நபரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் நேரத்தில் தமிழக பகுதிக்கு சாராயம் பாக்கெட்டுகளில் அடைத்து கடத்துவதற்கு முயன்ற நிலையில் போலீசார் சாராய கேன்களை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ramprasath H
First published: