தமிழகத்தில் நள்ளிரவில் நிகழ்ந்த சாலை விபத்துக்கள் - 15 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடியில் ஏற்பட்ட விபத்துக்கு வேன் ஓட்டுநர் தூங்கியதே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் நள்ளிரவில் நிகழ்ந்த சாலை விபத்துக்கள் -  15 பேர் உயிரிழப்பு
தூத்துக்குடியில் ஏற்பட்ட விபத்து
  • News18
  • Last Updated: July 18, 2019, 12:26 PM IST
  • Share this:
தமிழகத்தின் இரு வேறு இடங்களில் நள்ளிரவில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பகுதியிலிருந்து மின் வாரிய ஒப்பந்த ஊழியர்கள் உட்பட 10 பேர் எலெக்ட்ரிக் வேலைக்காக திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே ஏமப்பேர் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது, நெல்லையில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.


கள்ளக்குறிச்சி அருகே ஏமப்பேர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்து.


இந்த கோர விபத்தில் சிக்கி 8 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் உயிரிழந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. விபத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதேபோல், தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அருகே பாலத்தின் மீது மோதிய வேன் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 6 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர், திருச்செந்தூர் கோவிலுக்கு வேனில் சென்றனர்.அப்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தூத்துக்குடியில் 20 அடி பாலத்தில் விழுந்த வேன்


விபத்தில் படுகாயமடைந்த 12 பேர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். வேன் ஓட்டுநர் தூங்கியதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Also see... சென்னை டூ புதுவை.. ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது...





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: July 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்