தேர்தல் ஆணைய செயலாளர் உள்பட 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தேர்தல் ஆணைய செயலாளர் உள்பட 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!
தலைமைச் செயலகம்
  • News18
  • Last Updated: November 15, 2019, 11:45 AM IST
  • Share this:
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக செயல்பட்டு வந்த பழனிசாமி பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு பதில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தேர்தல் ஆணைய செயலாளர் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Loading...விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விசுவாசமாக பணியாற்றியதற்காக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், தேர்தல் ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளாரா என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே தமிழக அரசு சார்பில் பள்ளிக்கல்வித்துறையில் புதிதாக ஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய ஆணையராக சிஜி தாமஸ் வைத்யன் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக அண்ணாதுரையும், தஞ்சை மாவட்ட ஆட்சியராக கோவிந்தராவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதாரத்துறை இணை செயலாளராக, விருதுநகர் ஆட்சியராக இருந்த சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போன்று தமிழகம் முழுவதும் 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Also see...
First published: November 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
Listen to the latest songs, only on JioSaavn.com