Home » News » Tamil-nadu » 15 CRORE WORTH CELL PHONE ROBBERY CASE TN POLICE HAVE CAUGHT MAIN CULPRIT IN MADHYA PRADESH RIZ

ஓசூரில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களைக் கொள்ளையடித்த வழக்கு... மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸ்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கடந்த மாதம் கண்டெய்னர் லாரி ட்ரைவர்களைத் தாக்கிவிட்டு 15 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களைக் கொள்ளையடித்த வழக்கில் முக்கியக் குற்றவாளி ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஓசூரில் 15 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களைக் கொள்ளையடித்த வழக்கு... மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸ்
15 கோடி ரூபாய் மதிப்பிலான செல்போன்களைக் கொள்ளையடித்த வழக்கு.. மத்தியப் பிரதேசம் சென்று முக்கியக் குற்றவாளியைப் பிடித்த தமிழக போலீஸ்
  • Share this:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி அருகே மேலுமலை எனும் இடத்தில் கடந்த மாதம் 22ம் தேதி காஞ்சிப்புரத்திலிருந்து மும்பையை நோக்கி 14,000 செல்போன்களை ஏற்றிவந்த கண்டெய்னர் லாரி ட்ரைவர்களை கொள்ளைக் கும்பல் ஒன்று தாக்கியதுடன், லாரியைக் கடத்திச் சென்று அதிலிருந்த 15 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த செல்போன்களை திருடிச் சென்றிருந்தது. கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அனைவரும் மத்தியப் பிரதேச மாநிலத்தவர்கள் என்று தெரியவந்த நிலையில், 4 இன்ஸ்பெக்டர்கள், 20 போலீசார் என 6 தனிப்படை போலீசார் மத்தியப் பிரதேசத்திற்குச் சென்றனர்.

ஒருமாதமாக அவர்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்த சூழலில், டெல்லியில் பதுங்கியிருந்த மத்தியப் பிரதேச மாநிலம் இண்டூரைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளி பரத் தேஜ்வாணியைக் கைதுசெய்து தமிழகத்திற்கு அழைத்து வந்தனர். மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு ஓசூர் இரண்டாம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பரத் தேஜ்வாணியை 15 நாட்கள் போலீஸ் காவலில் எடுக்க காவல்துறை சார்பில் கோரப்பட்டது.



இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓசூர் டிஎஸ்பி முரளி, பரத் தேஜ்வாணியை டெல்லியில் கைதுசெய்து ஓசூர் அழைத்து வந்ததாகவும், அவரை போலீஸ் காவலில் விசாரணை நடத்தினால் மேலும் பல தகவல்களும், கொள்ளைக் கும்பல் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்கள் குறித்து விவரங்களும் தெரிய வரக்கூடும் என்றும் கூறினார்.


மேலும், மத்தியப் பிரதேசத்தில் தமிழகத்தின் 6 தனிப்படை போலீசார் சரியான திசையில் விசாரித்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறிய அவர், முன்பு சந்தேகித்ததுபோல, மத்தியப் பிரதேச மாநில தீவாஸ் மாவட்டத்தை அங்கித்ஜான்ஜா தலைமையில் இந்த கொள்ளைக் கும்பல் இயங்கவில்லை என்றும் வேறு ஒரு கும்பல் இதில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.
First published: November 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading