ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வெளிநாட்டில் உள்ள தமிழக தொன்மையான சிலைகள் ஒருவாரத்தில் மீட்டுவரப்படும் - அமைச்சர் பாண்டியராஜன்

வெளிநாட்டில் உள்ள தமிழக தொன்மையான சிலைகள் ஒருவாரத்தில் மீட்டுவரப்படும் - அமைச்சர் பாண்டியராஜன்

மத்திய அமைச்சர் பிரகலாத்சிங் படேல், அமைச்சர் பாண்டியராஜன்

மத்திய அமைச்சர் பிரகலாத்சிங் படேல், அமைச்சர் பாண்டியராஜன்

இன்னும் ஒரு வாரத்தில் 15 தொன்மை சிலைகள் இந்தியா வருவதாகவும் இந்தியாவின் தொன்மை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவில் நிச்சயம் தென் இந்தியர்கள் இடம் பெறுவார்கள் என்றும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மா.பாண்டியராஜன் மத்திய கலாச்சாரத்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத்சிங் படேல், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை இயக்குனர் வித்யாவதி ஆகியோரை சந்தித்தார்.

சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது, இரண்டு நாள் பயணத்தில் தொல்லியல், பண்பாடு, அருங்காட்சியகம் மேம்பாடு தொடர்பான ஆலோசனைகளுக்காக டெல்லி வந்ததாகவும் இன்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் சந்திப்பின்போது ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடர்பாக முழுமையாக அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் உறுத்தியளித்ததாகவும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், உலகத் தரம் மிக்க அருங்காட்சியகம் தமிழகத்தில் அமைக்க இடம் தருவது தொடர்பான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றதாக குறிப்பிட்டார். நிச்சயம் அமைச்சர் மத்திய அரசு கேட்ட இடம் கொடுக்க தமிழக அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தார். எழும்பூர் அருங்காட்சியகத்தை உலகத் தரமிக்கதாக மாற்ற 140 கோடி தேவை என தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக ’பந்தியன் கட்டடம்’ புதுப்பிக்க 10 கோடி கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தமிழக அரசு கேட்டதில் 100 கோடி வரை தமிழக அரசுக்கு மத்திய அரசுக்கு கொடுக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Also read: ராமேஸ்வரம் கோயிலில் தேய்மானத்தால் நகைகள் எடைகுறைவு; முறைகேடுகள் இல்லை- கோயில் நிர்வாகம்

மேலும், தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட சிற்பங்களை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டுவர அமைக்கப்பட்ட 15 பேர் கொண்ட மத்திய குழு ஆஸ்திரேலியா, லண்டன் போன்ற நகரங்களில் இருந்து 15 சிலைகள் இன்னும் ஒரு வாரத்தில் இந்தியா கொண்டுவர உள்ளது என்றார்.

தமிழகத்தை இந்தியாவில் பழமை வாய்ந்த இடமாக மாற்ற மைசூரில் உள்ள கல்வெட்டுகளின் பிரதிகள் எழும்பூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும், அதற்கான பணிகளும் மத்திய அரசுடன் இணைந்து செய்வதாக தெரிவித்த அமைச்சர், தூத்துக்குடி மாவட்டம் சிவகளை செக்காட்டி, ஸ்ரீ முளக்கரை, பொட்டல் கொட்டு திரடு உள்ளிட்ட 6 இடங்களில் அகழாய்வுப் பணிகள் தொடங்க விரைவில் மத்திய அரசின் அனுமதி தமிழக அரசுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.

இந்தியாவின் தொன்மை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மத்திய அரசின் குழுவில் கட்டாயம் தமிழர்கள் இடம்பெருவார்கள் என நம்பப்படுகிறது. தமிழகம் மட்டுமல்ல தென் மாநிலங்களை சேர்ந்த பலரும் இதில் இடம் பெருவார்கள் என்றார்.

First published:

Tags: Excavation, Mafoi Pandiarajan