Home /News /tamil-nadu /

தமிழகத்தில் இன்று 14-வது தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் இன்று 14-வது தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் 50,000 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இன்றைய முகாமுக்கு ஒரு கோடி தடுப்பூசி கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்று வந்த மிக தடுப்பூசி முகாம் பிறகு வாரத்தில் இரு தினங்கள் என ஞாயிறு மற்றும் வியாழக்கிழமை நடைபெற்றது. தற்போது சனிக்கிழமை தோறும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

    இதுவரை நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 2.43 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகள் அங்கன்வாடி மையங்கள் சத்துணவு மையங்கள் என பல்வேறு இடங்களில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    தமிழகத்தில் இன்னும் 1.09 கோடி பேர் முதல் டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளவில்லை. மேலும் 93.4 லட்சம் பேர் உரிய நேரத்தில் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ளவில்லை. இரண்டாவது டோஸ் செலுத்தாதவர்கள் இந்த முகாம்களை பயன்படுத்தி உடனே தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தி வருகிறது.

    Also Read  : இந்தியாவில் முகக்கவசம் அணிவது குறைந்துவிட்டது: எச்சரிக்கும் மத்திய அரசு!

    சென்னையில் மெகா தடுப்பூசி முகாம் 1600 இடங்களில் நடைபெறுகிறது. இது வரை 10.38 லட்சம் பேர் உரிய நேரத்தில் இரண்டு டோஸ் எடுத்துக்கொள்ளவில்லை.இன்றைய மெகா தடுப்பூசி முகாமை மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் காலை 10.30 மணிக்கு தி நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தொடங்கி வைக்கிறார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Corona Vaccine

    அடுத்த செய்தி