பொன்னமராவதி உட்பட 30 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு

தங்கள் சமூகம் குறித்து வாட்ஸ் அப்பில் இழிவாக பேசிய வர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பொன்னமராவதி, குழிபிறை, பனையப்பட்டி, பனையப்பட்டி, நல்லூர், தேனிமலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலையின் குறுக்கே மரங்கள் வெட்டிப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Vijay R | news18
Updated: April 19, 2019, 6:24 PM IST
பொன்னமராவதி உட்பட 30 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவு
breaking news
Vijay R | news18
Updated: April 19, 2019, 6:24 PM IST
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி உட்பட 30க்கும் கிராமங்களில் 144 தடை உத்தரவை இலுப்பூர் வருவாய் கோட்டாச்சியார் சிவதாஸ் பிறப்பித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் வாட்ஸ் அப்பில் தங்கள் சமூகம் குறித்து மாற்று சமூகத்தை சேர்ந்த இருவர் இழிவாக பேசியதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும் கடை வீதிகளில் உள்ள கடைகள் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அவர்களில் சிலர் அடித்து நொறுக்கியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து அவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து அங்கு வந்த புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வராஜ் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார். வாட்ஸ் அப்பில் இழிவாக பேசி பதிவிட்டு வர்களை கைது செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

இன்று காலை தங்கள் சமூகம் குறித்து வாட்ஸ் அப்பில் இழிவாக பேசிய வர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி பொன்னமராவதி, குழிபிறை, பனையப்பட்டி, பனையப்பட்டி, நல்லூர், தேனிமலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலையின் குறுக்கே மரங்கள் வெட்டிப் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை எஸ்பி.செல்வராஜ் தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் பொன்னமராவதி பகுதிகளில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

இந்நிலையில் அசாம்பவிதங்கள் ஏதும் ஏற்படமால் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொன்னமாரவதி உட்பட 30 கிராமங்களுக்கு 144 தடை உத்தரவை கோட்டாச்சியார் பிறப்பித்துள்ளார்.

Also Watch: ”அவர்களை ஏமாற்றமாட்டேன்” - ரஜினிகாந்த் மகிழ்ச்சி பேட்டி

First published: April 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...