இரண்டாவது மனைவியின் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே 14 வயது மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்

இரண்டாவது மனைவியின் 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது
கைதானவர்
  • News18
  • Last Updated: July 16, 2020, 4:00 PM IST
  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் சென்னம்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (45) என்பவர், அவரது சகோதரிகள் இருவரை திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் ஒவ்வொரு மகள்கள் உள்ளனர்.

தற்போது புதூரில் கருப்பசாமி குடும்பத்துடன் வசித்து வரும்நிலையில், இரண்டாவது மனைவியின் 14 வயது மகளுக்கு சில தினங்களுக்கு முன் திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனைத்தொடர்ந்து புதூர் அரசு மருத்துமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது சிறுமி ஆறு மாத கர்ப்பம் ஆக இருப்பது தெரியவந்துள்ளது. இதை அடுத்து சிறுமியின் தாய் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சிறுமியிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு அரையாண்டு விடுமுறையில் இருந்த போது, அவரது தந்தை கருப்பசாமி குடிபோதையில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.


மேலும் வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக கூறி தொடர்ந்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை போலீசார் தேடி வந்தனர்.




படிக்க: ₹ 264 கோடி செலவில் கட்டி திறக்கப்பட்ட பாலம் - ஒரே மாதத்தில் உடைந்ததால் அதிர்ச்சிபடிக்க: இந்தியாவை முன்னுதாரணமாகக் கொண்டு டிக்டாக்கைத் தடை செய்யவேண்டும் - அமெரிக்க எம்.பிக்கள் வலியுறுத்தல்








புதூர் பகுதியில் பதுங்கியிருந்த கருப்பசாமி எட்டயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் கலா தலைமையில் போலீஸார் கைது செய்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

மதுபோதையில் பெற்ற மகளையே தந்தை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் விளாத்திகுளம் பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
First published: July 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading