மயிலாடுதுறையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. சிக்குமா கொடூர கும்பல்?

Youtube Video

மயிலாடுதுறை மாவட்டத்தில், 14 வயது சிறுமியை அவரது சகோதரி கணவர் உள்ளிட்ட சிலர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். சிறுமிக்குப் பெண் குழந்தை பிறந்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிறுமியை 5க்கும் மேற்பட்டவர்கள் தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்ததாகவும் பகீர் புகார் எழுந்துள்ளது.

 • Share this:
  மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. கடந்த திங்கட்கிழமை அந்த சிறுமிக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

  மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், மயிலாடுதுறை மகளிர் காவல்நிலையத்தில் மாவட்ட சமூகப் பணியாளர் ஆரோக்கியராஜ் புகாரளித்தார். சிறுமியிடம் விசாரணை நடத்தியதில், சிறுமியின் சகோதரி கணவர், அவரைப் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கியதாக கூறப்பட்டது.

  சிறுமி கருவுற்றதால் அதைக் காட்டி அவர் சிறுமியைத் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. இதற்கு சிறுமியின் தாயே உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் தாய் மற்றும் சகோதரி கணவர் மீது போக்சோ சட்டம் மற்றும் குழந்தைகள் திருமணத் தடைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

  ஆனால் இந்த வழக்கில் உண்மையில் நடந்தது வேறு என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். சிறுமியின் அக்கா கணவர் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாகவும், சிறுமியைப் தொடர்ச்சியாக சிலர் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

   

  மேலும் படிக்க: குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் ரிடர்ன்ஸ்.. ராய் ஜோன்சுடன் செப்.12-ஆம் தேதி மோதுகிறார்

  வழக்கை மடைமாற்ற சிறுமியின் சகோதரி கணவரை சிக்க வைத்து மற்றவர்கள் தப்பிக்க முயல்வதாக கிராம மக்களும் குற்றம்சாட்டியுள்ளனர். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய, உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உண்மை வெளிச்சத்திற்கு வருமா?
  Published by:Vaijayanthi S
  First published: