• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாக கைது செய்யப்பட்ட 14 பேர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்!

தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதாக கைது செய்யப்பட்ட 14 பேர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்!

Breaking News

Breaking News

இந்தநிலையில், அரபு நாட்டில் அன்சருல்லா அமைப்புக்கு என்ற நிதி திரட்டியதாக கடந்த சனிக்கிழமை 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ஐக்கிய அரசு நாடுகளில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 14 பேரை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.


    ஐக்கிய அரபு நாடுகளில் "அன்சருல்லா" என்ற அமைப்பினர் தலை தூக்குவதாக அந்த நாட்டு உளவுப் பிரிவு எச்சரிக்கைவிடுத்திருந்தது. அந்த அன்சருல்லா என்ற அமைப்பானது, மதம் சார்ந்த சிந்தனையுடன் ஆயுதம் தாங்கியவர்கள் என்று உளவுப் பிரிவு எச்சரிக்கைவிடுத்திருந்தது.

    இந்தநிலையில், அரபு நாட்டில் அன்சருல்லா அமைப்புக்கு என்ற நிதி திரட்டியதாக கடந்த சனிக்கிழமை 14 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த 14 பேரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்நாடு, இந்திய தூதரகத்தில் தகவல் அளித்தது.

    அதன்படி, கைது செய்யப்பட்ட 14 பேரும் இன்று டெல்லியில் வைத்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டனர். அந்த 14 பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தேசிய புலனாய்வு அதிகாரிகள், 14 பேரையும் விமானம் மூலம் சென்னை கொண்டு வந்தனர். அந்த 14 பேரும் பூந்தமல்லியிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி செந்தூர் பாண்டியன் வரும் 25ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

    ஆஜர் படுத்தப்பட்ட 14 பேர்களின் விவரங்கள்:

    1. முஹ்ம்மது ஷேக் மொஹ்தீன் - மதுரை

    2. முஹம்மது அசாருதீன் - திருவாரூர்

    3. ராஃபிக் அஹம்மது - சென்னை

    4. முஹம்மது அப்சர் - தேனி

    5. மொய்தீன் சீனி ஷாகுல் ஹமிது - கீழக்கரை

    6. முஹம்மது இப்ராஹிம் - நாகப்பட்டிணம்

    7. மீரான் கனி - தேனி

    8. குலாம் நபி ஆசாத் - பெரம்பலூர்

    9 . ரஃபி அஹம்மது - ராம் நாடு

    10. முன்தாப்சீர் - ராம் நாடு

    11. உமர் பாஃரூக் - தஞ்சை

    12. பாஃரூக் - வழிநோக்கம் - அருப்புக்கோட்டை

    13. பைசல் ஷெரிஃப் - ராம் நாடு

    14. முஹம்மது இப்ராஹிம் - திருநெல்வேலி.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: