தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை 14 சதவிகிதம் உயர்த்தி ஜனவரி 01, 2022 முதல் 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்தி வழங்கிட கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதியன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டார்.
Also Read
தஞ்சாவூரில் விவசாயிகள் சாலை மறியலில் : நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க கோரிக்கை
இந்நிலையில், இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, அகவிலைப்படி உயர்வு இம்மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும், திருத்தப்பட்ட ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கும் உயர்வு அளிக்கப்படும் என்றும் 2016ம் ஆண்டுக்கு முந்தைய விகிதத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.