கலைஞர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த 14 பேருக்கு மீண்டும் இடம்!

கருணாநிதி

இதில், 2006ல் இருந்து 2011 வரை அமைச்சராக இருந்த 14 பேர் மீண்டும் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

 • Share this:
  தமிழகத்தின் முதல்வராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை பதவியேற்கவுள்ளார். இந்தநிலையில், யார் யாருக்கு எந்தெந்த அமைச்சரவை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

  நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற திமுகவை ஆட்சியமைக்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அழைப்பு விடுத்துள்ளார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்தப் புதிய அரசு, நாளை காலை ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் நடைபெறுகிறது.

  இந்த நிலையில், மு.க. ஸ்டாலினுடன் பதவியேற்கும் அமைச்சர்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.மொத்தம் 34 பேர் கொண்ட இந்த பட்டியலில் கடந்த 2006-ம் ஆண்டில் கலைஞர் தலைமையில் அமைச்சர்களாக இருந்த 14 பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விவரம் வருமாறு,

  1. மு.க.ஸ்டாலின் - முதலமைச்சர்

  2. துரைமுருகன் - நீர்வளத்துறை

  3. பொன்முடி - உயர்கல்வித்துறை அமைச்சர்|

  4. கே.என்.நேரு - நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்

  5. ஐ.பெரியசாமி - கூட்டுறவுத்துறை அமைச்சர்

  6. ஏ.வ.வேலு - பொதுப்பணித்துறை அமைச்சர்

  7. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - வேளாண்மை துறை அமைச்சர்

  8. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் - வருவாய்த்துறை அமைச்சர்

  9. தங்கம் தென்னரசு - தொழில்துறை அமைச்சர்

  10. பெரிய கருப்பன் - ஊரகத்துறை அமைச்சர்

  11. தா.மோ. அன்பரசன் - ஊரகத்தொழில்துறை அமைச்சர்

  12. வெள்ளக்கோவில் சாமிநாதன் - செய்தித்துறை அமைச்சர்

  13. கீதா ஜீவன் - சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர்

  14. தா.ராமச்சந்திரன் - வனத்துறை அமைச்சர்
  Published by:Esakki Raja
  First published: