12-ம் வகுப்புத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

12-ம் வகுப்புத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்

சீமான்

தமிழகத்தில் 14 நாட்கள் முழுப் பொது முடக்கத்திற்கு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளதை கவனத்தில் கொண்டு 12ஆம் வகுப்புத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

 • Last Updated :
 • Share this:
  இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரையில் இல்லாத அளவுக்கு 2.17 லட்சத்தை கடந்துள்ளது. தமிழகத்திலும் நேற்று கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதையடுத்து, தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய அளவில் மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

  இந்நிலையில், தமிழகத்தில் 14 நாட்கள் முழுப் பொது முடக்கத்திற்கு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளதை கவனத்தில் கொண்டு 12ஆம் வகுப்புத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

  இதுகுறித்து சீமான் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, ’கொரோனோ பெருந்தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாகப் பரவிவரும் நிலையில், விரைவில் நடைபெறவுள்ள பன்னிரெண்டாம் வகுப்புத் பொதுத்தேர்வுகள் குறித்து மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் அச்சத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர்.

  தமிழகத்தில் கொரோனோ பெருந்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த 14 நாட்கள் முழுப் பொது முடக்கத்திற்கு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. எனவே நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் மற்றும் அனைத்து கல்லூரி தேர்வுகளையும் ஒத்திவைக்க தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: