ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு சம்பவங்கள்: 11 வழக்குகளில் 14 பேர் கைது!

மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு சம்பவங்கள்: 11 வழக்குகளில் 14 பேர் கைது!

மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு

மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் கார் மற்றும் ஆட்டோ மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் அதே பகுதியை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  கடந்த சில நாட்களாக பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் மண்ணெண்ணெய் குண்டுகள் வீசப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக கோவை, ஈரோடு, மதுரை, சேலம், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு தொடர்பாக 19 குற்ற வழங்குகள் பதியப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

  இந்த 19 வழக்குகளில் 11 வழக்குகளில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் கோவை மாநகர், குனியமுத்தூர் பகுதியில் கார் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர் எனவும் கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் கார் மற்றும் ஆட்டோ மீது மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் அதே பகுதியை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

  இதையும் வாசிக்க: பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் - டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை

  மேலும் சேலத்தில் கார் மற்றும் ஆட்டோ மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர். மதுரையில் கார் செஹ்ட் ஒன்றில் தீ வைக்கப்பட்ட வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: BJP cadre, RSS, Social Democratic Party of India (SDPI), Tamilnadu