புஸ்வானம் கொளுத்தும் போது கவனமாக இருக்கவும் - மருத்துவர்கள் அறிவுரை

புஸ்வானம் கொளுத்தும் போது கவனமாக இருக்கவும் - மருத்துவர்கள் அறிவுரை
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: October 27, 2019, 12:54 PM IST
  • Share this:
தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு வெடிக்கும் போது லேசான தீக்காயம் அடைந்து 14 பேர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதுவரை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை பொறுத்தவரை 14 நபர்கள் பட்டாசு காரணமாக லேசான தீக்காயத்துடன் சிகிச்சை பெற்றுள்ளனர்.

அதிகபட்சமாக 4 சதவீதம் மட்டுமே தீக்காயம் ஆனது உடலில் பரவி இருக்கிறது. குறைந்த பட்சமாக ஒரு சதவீதம் என்று தெரிவித்திருக்கிறார்கள். இதில் ஐந்து நபர்கள் புஸ்வானம் வெடித்து தீ காயம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.‌


மாலை நேரத்தில் அதிக அளவில் புஸ்வானம் கொளுத்துவார்கள் அதனால் புஷ்பம் போன்றவற்றை வெடிக்கும்போது குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரையும் வழங்கி இருக்கிறார்கள்.

First published: October 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...