சென்னை அருகில் 1,381 கிலோ தங்கம் பறிமுதல்!

மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இதுவரையில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

news18
Updated: April 17, 2019, 7:37 PM IST
சென்னை அருகில் 1,381 கிலோ தங்கம் பறிமுதல்!
Breaking News
news18
Updated: April 17, 2019, 7:37 PM IST
சென்னை, ஆவடி அருகே வேப்பம்பட்டு சோதனை சாவடி அருகே வேனில் கொண்டு செல்லப்பட்ட 1381 கிலோ தங்கத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெறவுள்ளது. முன்னதாக, மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் இதுவரையில் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தநிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே வேப்பம்பட்டு சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வேனில் நடத்திய சோதனையில் 1381 கிலோ தங்கம் இருந்துள்ளது.

அதுதொடர்பாக, வாகன ஓட்டிகளிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் கொடுத்த தகவல் முன்னுக்குப் பின் முரணாக இருந்துள்ளது. அதனையடுத்து, வேனுடன் சேர்த்து 1381 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த தங்கம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது என்று கூறப்படுகிறது.
First published: April 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...