முன்னாள் முதல்வர் கருணாநிதியைக் கவுரவப்படுத்தும் விதமாக, அவரது நினைவிடம் அருகே கடலினுள் 137 அடி உயர பேனா சின்னத்தை நிறுவ மத்தியஅரசின் ஒப்புதலை தமிழக பொதுப்பணித் துறை கோரவுள்ளது.
முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கடந்த2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். அவரது உடல் மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில், ரூ.39 கோடியில் 2.21 ஏக்கர் பரப்பில் நினைவிடம் அமைக்கும் பணி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டபோது, அவர் பயன்படுத்திய பேனாவும் உடன் வைத்து அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், பேனா வடிவிலான நினைவுச் சின்னத்தை கருணாநிதி நினைவிடம் அருகில் கடலுக்குள் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இலக்கியத்தில் அவர் ஆற்றிய பணிகளை கவுரவிக்கும் விதமாக 42 மீட்டர் அதாவது 137 அடி உயரத்தில் பேனா போன்ற நினைவுச்சின்னம் கடலுக்குள் நடுவில் அமைக்கப்பட உள்ளது.
மேலும், பேனா' நினைவுச்சின்னத்தை ஒட்டி புல்வெளிகள் உள்பட கண்ணை கவரும் வகையிலான கலை நயமிக்க ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. கருணாநிதி நினைவிடத்தில் இருந்து நடுக்கடலில் அமைக்கப்படும் 'பேனா' நினைவுச்சின்னத்துக்கு 290 மீட்டர் நிலப்பரப்பிலும், 360 மீட்டர் கடலின் மேலேயும் செல்லும் வகையில் 650 மீட்டர் நீளத்தில் பிரமாண்ட இரும்பு பாலம் நிறுவப்படுகிறது.
கடல் அலைகள் எழும்பும் மட்டத்தில் இருந்து 6 மீட்டர் உயரத்தில், 7 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட உள்ள இரும்பு பாலத்தில் பார்வையாளர்கள் கடலின் அழகை ரசித்தவாறு நடந்து செல்வதற்கு ஏதுவாக கண்ணாடியிலான பாதை வசதிகளும் செய்யப்பட உள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ரூ.81 கோடி மதிப்பில்பொதுப்பணித் துறையால் அமைக்கப்படும் இந்த நினைவுச் சின்னத்துக்கு சென்னை மாவட்ட கடற்கரை ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, மாநில கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலையும் பொதுப்பணித் துறை பெற்றுள்ளது.
தொடர்ந்து, மத்திய சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றல் அமைச்சகம் மற்றும் கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை பெறும் முயற்சியில் பொதுப்பணித் துறை இறங்கியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.