எகிப்தில் இருந்து 135 மெட்ரிக் டன் பெரிய வெங்காயம் சென்னைக்கு வருகை

எகிப்தில் இருந்து மேலும் 135 மெட்ரிக் டன் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எகிப்தில் இருந்து 135 மெட்ரிக் டன் பெரிய வெங்காயம் சென்னைக்கு வருகை
வெங்காயம்
  • News18
  • Last Updated: October 27, 2020, 6:13 PM IST
  • Share this:
மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்து வெங்காய விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலை, தற்போது 100 ரூபாய்க்கு அதிகமாக உயர்ந்து உள்ளது. இதனால் எகிப்து மற்றும் ஈரானில் இருந்து அரசின் உதவியோடு வியாபாரிகள் வெங்காயத்தை கொள்முதல் செய்து வருகின்றனர்.



Also read... திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமிக்கு நகைக்கடை அதிபர் அளித்த பிரமாண்ட பரிசு!

கடந்த வாரம் எகிப்திலிருந்து 135 மெட்ரிக் டன்னும், ஈரானில் இருந்து 220 மெட்ரிக் டன் வெங்காயமும் இறக்குமதி செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று சென்னை துறைமுகத்திற்கு 5 குளிரூட்டப்பட்ட கண்டைனர்களில் மேலும் எகிப்தில் இருந்து 135 மெட்ரிக் டன் எகிப்த் வெங்காயம் வந்துள்ளது. எகிப்து வெங்காயத்தின் விலையானது கிலோ ஒன்றுக்கு 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
First published: October 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading