தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் 1311 டாஸ்மாக் கடைகள் மூடல்

Youtube Video

தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் 1311 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன . தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ள உண்மை என்ன ?

 • Share this:
  தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில் 1311 டாஸ்மாக் கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது வெறும் பேசும் பொருளாக மட்டுமே இருந்து வருகிறது. 2011ஆம் ஆண்டில் முதலமைச்சராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார்.

  இந்நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்ட விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், சமூக ஆர்வலர் காசி மாயன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த தமிழ்நாடு வாணிபக் கழகம், கடந்த 15 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக  1311 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மட்டுமே மூடப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஆனால், மதுபானக்கடைகள் மூலம் கிடைக்கும் வருவாய், கடந்த 2019ஆம் ஆண்டில் 31 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்ததாகவும் வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: