ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆப்பரேஷன் மின்னல் ரவுடி வேட்டை... 48 மணி நேரத்தில் 1310 ரவுடிகள் கைது...

ஆப்பரேஷன் மின்னல் ரவுடி வேட்டை... 48 மணி நேரத்தில் 1310 ரவுடிகள் கைது...

சைலேந்திர பாபு

சைலேந்திர பாபு

1310 rowdies arrested in 48 hours | இதில் 221 ரவுடிகள் தலைமறைவு குற்றவாளிகள், 110 ரவுடிகள் மீது பிடி வாரண்டுகள் நிலுவையில் இருந்தன. இவர்கள் 331 பேரும் பல்வேறு சிறைச்சாலையில்  அடைக்கபட்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தமிழ்நாடு காவல்துறை நடத்திய ஆப்பரேஷன் மின்னல் ரவுடி வேட்டையில், 24 மணி நேரத்தில் 133 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

  தமிழ்நாட்டில் ரவுடிகளுக்கு எதிராக தமிழ்நாடு காவல்துறை ‘ஆப்பரேஷன் மின்னல் வேட்டை’ என்ற பெயரில் தேடுதல் வேட்டை நடத்தியது. அதில் முதல் 24 மணி நேரத்தில் 133 ரவுடிகள் சுற்றி வளைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பல ஆண்டுகள் பிடிபடாமல் இருந்த பிரபல ரவுடிகள் மற்றும் பிற மாநிலங்களில் பதுங்கியிருந்த சிலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

  இதைத்தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் நடந்த வேட்டையில் மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி கடந்த 48 மணி நேரத்தில் நடந்த இந்த மின்னல் வேட்டையில் மொத்தம் 1310 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  இதையும் வாசிக்க: அரசியலையும் ஆன்மிகத்தையும் இணைத்து பார்க்காத மக்களால் பாஜக திணறுகிறது - மு.க. ஸ்டாலின்!

  இதில் 221 ரவுடிகள் தலைமறைவு குற்றவாளிகள், 110 ரவுடிகள் மீது பிடி வாரண்டுகள் நிலுவையில் இருந்தன. இவர்கள் 331 பேரும் பல்வேறு சிறைச்சாலையில்  அடைக்கப்பட்டனர்.

  மேலும் பிடிபட்ட மீதமுள்ள 979 ரவுடிகள், காவல்நிலைய பதிவேடு குற்றவாளிகள் எனவும், அவர்களிடம் இருந்து நன்னடத்தை உறுதி மொழி பெறப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் அதை மீறும் பட்சத்தில், கைது செய்யப்பட்டு 6 மாத காலம் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Arrested, Rowdies, Sylendra Babu, Tamilnadu police