13 வயது சிறுமி கார் ஓட்டி விபத்து... முதியவர் படுகாயம்..!

கட்டுபாட்டை இழந்து வீட்டு வாசலில் அமர்ந்திருந்த முதியவர் மீது மோதி விபத்து.

13 வயது சிறுமி கார் ஓட்டி விபத்து... முதியவர் படுகாயம்..!
News18
  • News18
  • Last Updated: December 4, 2019, 7:16 AM IST
  • Share this:
திருப்பூரில் 13 வயது சிறுமி ஓட்டிய கார் அருகில் உள்ள வீட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

புது ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சசிக்குமார் என்பவரின் அக்காள் மகளான 13 வயது சிறுமி, அவரது காரை எடுத்து ஓட்டியுள்ளார். அப்போது, சிறுமியின் கட்டுபாட்டை இழந்து கார் வீட்டு வாசலில் அமர்ந்திருந்த முதியவர் காந்திமணியன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், படுகாயம் அடைந்த முதியவர் காந்திமணியனை அக்கம்பக்கதில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்தவர்கள் சமரசம் செய்ததையடுத்து முதியவர் காந்திமணியன் புகார் கொடுக்கவில்லை. சிறுமி கார் ஓட்டி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. 
First published: December 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...