• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் 13 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த மழை!

சென்னையில் 13 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த மழை!

மழை

மழை

ஜூலை மாதத்தில் 48 மணி நேரத்தில் இவ்வளவு மழை பெய்வது 200 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.

  • Share this:
    சென்னையில் 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஜூலை மாதத்தில் அதிக அளவு மழை பதிவாகியுள்ளது.


    சென்னையில் கடந்த சில நாட்களாக மாலை தொடங்கி இரவு வரை மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் ஜுலை மாதத்திற்கான மழைப்பொழிவு கடந்த காலங்களை விட அதிகமாக உள்ளது.


    குறிப்பாக நுங்கம்பாக்கம் பகுதியில் ஜூலை மாதத்தில் மட்டும் 22 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 2007-ம் ஆண்டுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் சென்னையில் பதிவான உச்சபட்ச மழையளவு இதுவாகும்.


    ஜூன் மாதம் முதல் கணக்கிட்டால் 27.5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோல் மீனம்பாக்கம் பகுதியிலும் ஜூலை மாதம் மட்டும் 12 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.


    இந்திய வானிலை ஆய்வு மைய கணக்கீட்டின்படி சென்னை முழுவதுமே இயல்பை விட 50 சதவிகித மழை கூடுதலாக பெய்துள்ளது. ஜூலை 17 மற்றும் 18 ஆகிய இரு நாட்களீல் மட்டும் நுங்கம்பாக்கம் பகுதியில் 13 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


    ஜூலை மாதத்தில் 48 மணி நேரத்தில் இவ்வளவு மழை பெய்வது 200 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். ஜூலை மாதம் முடிய இன்னும் ஒரு வாரம் இருப்பதால் இந்த மழையளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: