திருமண ஆசை காட்டி எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் பஷீர்(19) பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இதனிடையே பஷீர் கோவையில் உள்ள ஒரு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் 13 வயதான சிறுமியை காதலித்து வந்துள்ளார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி நேற்று முந்தினம் கடத்திச் சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி வீடு திரும்பாததால் பெற்றோர்கள் கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
Read More : ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்
தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தோழிகளிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் பஷீர் என்பவர் கடத்திச் சென்றதும் திருமண ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுமியை மீட்ட போலீசார் போக்சோ சட்டத்தில் இளைஞர் பஷீரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
செய்தியாளர் : ஜெரால்ட்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Sexual harassment