• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சைக்கு 13 ஆயிரம் படுக்கைகள் ஒதுக்கீடு!

தமிழகத்தில் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சைக்கு 13 ஆயிரம் படுக்கைகள் ஒதுக்கீடு!

தமிழகத்தில் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சைக்கு 13 ஆயிரம் படுக்கைகள் ஒதுக்கீடு!

தமிழகத்தில் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சைக்கு 13 ஆயிரம் படுக்கைகள் ஒதுக்கீடு!

கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கலாம் என அச்சம் நிலவக்கூடிய சூழலில் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சைக்கு தேவையான வசதிகளை தயார் செய்து தமிழகம் வருகிறது.

  • Share this:
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் 12% குழந்தைகளாக இருப்பார்கள் என்றும் அதில் 5% பேருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் என்று மத்திய அரசு கணித்துள்ளது.

இந்த கணக்கீட்டின் அடிப்படையில் தமிழகத்தில் குழந்தைகள் சிகிச்சைக்கு வசதிகள் ஏற்பாட்ய் செய்யப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் 70க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் 12,667 படுக்கைகள் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சைக்கு என பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் தீவிர சிகிச்சைக்கு 3,810 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தீவிர சிகிச்சை அல்லாமல் ஆக்சிஜன் மட்டும் தேவைப்படும் குழந்தைகளுக்கு என 7,390 படுக்கைகள் தமிழகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் ஆக்சிஜன் அல்லாத மருத்துவமனை கவனிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு என 1,467 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Also read: கொரோனாவால் உயிரிழந்த மருத்துவப் பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு

தமிழகத்தில் குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனைகள் மூன்று விதமாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ கிரேட் - 300 முதல் 400 படுக்கை வசதிகள் கொண்ட 5 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளன.

பி கிரேட்-  அடுத்ததாக தலா 250 படுக்கைகள் கொண்ட 15 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளன. சி கிரேட்- 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனைகள் குழந்தைகளுக்கு கொரோனா சிகிச்சை வழங்குவது குறித்து திட்டமிடவும் கண்காணிக்கவும் 15 பேர் கொண்ட பிரத்யேக குழு task force தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு சிகிச்சைக்கு தேவையான படுக்கைகள், நோய் பாதிப்பை பொறுத்து எந்தெந்த குழந்தைகளுக்கு எங்கு சிகிச்சை அளிக்க வேண்டும், சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சிகள் யார் யாருக்கு வழங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் என்கிறார் குழு உறுப்பினர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் மற்றும் குழந்தை நல மருத்துவரான தேரணிராஜன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்க சிறப்பு பயிற்சிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் 3ஆயிரம் குழந்தை நல மருத்துவர்கள் உள்ளனர். அவர்கள் மட்டுமல்லாமல் பிற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு குழந்தை சிகிச்சை வழங்க பயிற்சி வழங்கப்படுகிறது.

இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்றுள்ளனர் என மாநில பச்சிளங்குழ்ந்தைகள் நல ஒருங்கிணைப்பு அதிகாரி மற்றும் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை திட்டமிடல் task force குழு உறுப்பினர் மருத்துவர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: