திட்டமிட்டபடி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற மே 3ஆம் தேதி நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரொனா பரவல் காரணமாக மார்ச் மாதத்தில் வழக்கமாக நடைபெறும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இம்முறை மே மாதத்தில் நடைபெறுகின்றது வருகின்ற மே 2-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் அதற்கு அடுத்த நாள் நடைபெறும் பொதுத் தேர்வில் ஆசிரியர்கள் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது இதனைத் தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் 38 மாவட்டங்களைச்சேர்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் காணொலி காட்சி வாயிலாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. இதில் பொது தேர்வினை திட்டமிட்டபடி நடத்துவதா அல்லது ஒத்தி வைப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனையடுத்து ஏற்கனவே முடிவு செய்தபடி மே 3ஆம் தேதி பொதுத் தேர்வை நடத்துவது என்று பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது மாணவர்கள் தங்கள் உயர்கல்வி பயில்வதற்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் தயாராவதற்கு ஏற்ற வகையிலும் உயர்கல்விக்கு விண்ணப்பிப்பதற்கு காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்கவும் திட்டமிட்டபடி வருகின்ற மே 3ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Must Read : கொரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்
மேலும், நாளை மறுநாள் தொடங்கி 23ஆம் தேதி வரை பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை பொதுதேர்வுகள் நடைபெற உள்ளது இவற்றை நடத்துவதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் துறை அண்மையில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: 12th exam, School education, School students