தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி தொடர்ச்சியாக 4 நாட்கள் அரசு விடுமுறை வருவதால், பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி உட்பட தொடர்ச்சியாக 4 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர திட்டமிடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. 14-ம் தேதி தமிழ்புத்தாண்டு. 15-ம் தேதி புனித வெள்ளி அதனைத்தொடர்ந்து சனி , ஞாயிறு விடுமுறை தொடர்ந்து வருகிறது. பண்டிகை மற்றும் சிறப்பு தினங்கள் தொடர்ச்சியாக வருவதால் பொதுமக்களின் பயணத் தேவை அதிகரிக்கும்.
இதனைக் கருத்தில் கொண்டு சென்னையிலிருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு நாள்தோறும் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளுடன் கூடுதலாக 1,200 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன.
Must Read : சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே வெடித்த மோதல்.. ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் அரிவாளுடன் ஏறியும் இளைஞர்கள் அட்டூழியம்
மேலும் சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக 17ஆம் தேதி அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.