ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

TN Women MLAs : தேர்தலில் வெற்றி பெற்ற 12 பெண் எம்.எல்.ஏ.க்கள் தமிழக சட்டமன்றத்திற்குச் செல்கின்றனர்!

TN Women MLAs : தேர்தலில் வெற்றி பெற்ற 12 பெண் எம்.எல்.ஏ.க்கள் தமிழக சட்டமன்றத்திற்குச் செல்கின்றனர்!

பெண் எம்.எல்.ஏ.க்கள்

பெண் எம்.எல்.ஏ.க்கள்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 234 பேரில் 12 பேர் மட்டுமே பெண்கள் பெண்கள். இதில், 6 பேர் திமுக எம்.எல்.ஏக்கள். 3 பேர் அதிமுக எம்.எல்.ஏக்கள், 2 வேர் பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் ஆவார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  திமுக சார்பில் தேர்வான பெண் எம்.எல்.ஏக்கள் 6 பேர். அதன்படி குடியாத்தம் தொகுதி அமுலு, கயல்விழி தாராபுரம் தொகுதி, சிவகாமசுந்தரி கிருஷ்ணராயபுரம்(தனி) தொகுதி, தமிழரசி மானாமதுரை தொகுதி, கீதா ஜீவன் தூத்துக்குடி தொகுதி, வரலட்சுமி மதுசூதனன் செங்கல்பட்டு தொகுதி, இந்த 6 பெண் எம்.எல்.ஏக்களும் சட்டமன்றத்திற்கு செல்கிறார்கள்.

  அதிமுக சார்பில் தேன்மொழி நிலக்கோட்டை(தனி) தொகுதி, மரகதம் குமாரவேல் மதுராந்தகம் தொகுதி, ஏற்காடு தொகுதி சித்ரா ஆகிய மூன்று பெண் எம்.எல்.ஏக்கள் சட்டமன்றம் செல்கிறார்கள்.

  பாஜக சார்பில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வானதி சீனிவாசன், மொடக்குறிச்சி தொகுதி சரஸ்வதி ஆகிய 2 பெண் எம்.எல்.ஏக்களும் செல்கின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் விளவங்கோடு தொகுதி பெண் எம்.எல்.ஏ விஜயதாரணி சட்டமன்றத்திற்கு செல்கின்றனர்.

  2016 தமிழக சட்டமன்ற தேர்தலின்போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட 21 பெண் எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். ஆனால் இந்தத் தேர்தலில் பெண் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆகக் குறைந்துள்ளது. அதன்படி, 2016ல் 9 சதவீதமாக இருந்த பெண் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை தற்போது மேலும் குறைந்துள்ளது.

  2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் 171 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 14 பெண்கள் வேட்பாளர்களை களம் இறக்கியது. 173 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக சார்பில் 12 பெண் வேட்பாளர்கள் தேர்தலை சந்தித்தனர்.

  234 வேட்பாளர்களைக் கொண்ட தமிழக சட்டமன்றதில், முன்னர் 10 சதவீதத்திற்கும் அதிகமான பெண்களின் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருந்தது. 1991-ல் 32 பெண் எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் நுழைந்தனர். இது 13 சதவீதம் ஆகும் இது அதிக பெண் எம்.எல்.ஏக்களைக் கொண்டதாக இருந்தது. அதனைத் தொடர்ந்து, 2001- ல் 24 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அது 10 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  Must Read : வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 300 டன் கொரோனா நிவாரண பொருட்கள் : 5 நாட்களில் 25 விமானங்கள்

  இந்நிலையில், வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ கீதா ஜீவனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.

  Published by:Suresh V
  First published:

  Tags: TN Assembly, TN Assembly Election 2021