• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஆவடியில் 3 மணி நேரத்தில் வெவ்வேறு இடங்களில் 12 லட்சம் ரூபாய் பறிமுதல்

ஆவடியில் 3 மணி நேரத்தில் வெவ்வேறு இடங்களில் 12 லட்சம் ரூபாய் பறிமுதல்

பணம்

பணம்

ஆவடியில் இன்று காலை வெவ்வேறு இடங்களில் நடந்த சோதனையில், 3 மணி நேரத்தில் 12 லட்சத்து 63 யிரத்து 110 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    ஆவடியில் இன்று காலை வெவ்வேறு இடங்களில் நடந்த சோதனையில், 3 மணி நேரத்தில் 12 லட்சத்து 63 யிரத்து 110 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியில் அதிமுகவினர் வீடு வீடாக வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.

    இந்நிலையில் ஆவடி பகுதியில், பிரேம் என்பவரிடம் 9,500 ரூபாயும், டில்லி பாபு என்பவரிடம் 21,500 ரூபாயும், சரஸ்வதி அம்சவேணி என்பவரிடம் 82,110 ஆயிரம் ரூபாயும் என அங்குமட்டும் 1,13,110 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அதிமுக தரப்பை சார்ந்தவர்கள் என்று சொல்லப்படுகின்றது.

    மேலும், அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கு மேலாளரிடம் இருந்து 11 லட்சத்து 50 அயிரம் ரூபாய் பறிமுதல் செய்யபட்டுள்ளது. இதில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனது.

    Must Read : போடிநாயக்கனூர் ஓபிஎஸ் வீட்டுக்கு அருகில் வருமானவரி சோதனை

     

    தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவடா செய்யப்படுவதைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்ட வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: