Home /News /tamil-nadu /

போலி முகவரியில் கார்கோ விமானத்தில் சென்னைக்கு 12 கிலோ தங்கம் கடத்தல்- புலனாய்வுதுறை அதிகாரிகள் விசாரணை

போலி முகவரியில் கார்கோ விமானத்தில் சென்னைக்கு 12 கிலோ தங்கம் கடத்தல்- புலனாய்வுதுறை அதிகாரிகள் விசாரணை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தப்பட்ட 12 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வுதுறை அதிகாரிகள் விசாரணை செய்துவருகின்றனர்.

    துபாயிலிருந்து சென்னைக்கு வந்த காா்கோ விமானத்தில் கடத்தி வந்த ரூ.5 கோடி மதிப்புடைய 12 கிலோ தங்கக்கட்டிகளுடன் கூடிய பாா்சலை சென்னை விமான நிலைய சரக்குப் பகுதியில் டி.ஆர்.ஐ எனப்படும் மத்திய வருவாய் புலனாய்வு துறையினா் பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர். போலி முகவரியில் பாா்சலை கொண்டு வந்த கடத்தல் ஆசாமிகளை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் தேடிவருகின்றனர்.

    ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து பெருமளவு கடத்தல் தங்கம் சென்னைக்கு காா்கோ விமானத்தில் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளின் தனிப்படையினா் திடீரென சென்னை பழைய விமான நிலைய வளாகத்தில் உள்ள, சர்வதேச சரக்ககப் பிரிவு அலுவலகத்திற்கு வந்தனா். சென்னைக்கு வெளிநாடுகளிலிருந்து வரும் அனைத்து காா்கோ விமானங்களையும் சோதனை நடத்திக் கொண்டிருந்தனா்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் துபாயில் இருந்து சென்னைக்கு வந்த காா்கோ விமான பார்சல்களை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது துபாயிலிருந்து சென்னை முகவரிக்கு வந்திருந்த ஒரு பார்சல் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த பார்சலில் இயந்திரங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    மதுபோதையில் அண்ணனின் கழுத்தை அறுத்த தம்பி கைது



    ஆனாலும் சந்தேகத்தின் பேரில் அந்த பார்சலில் இருந்த செல்போன் எண்ணை அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று வந்தது. மேலும் அந்த பார்சலில் இருந்த முகவரியும் போலியானது என்று தெரியவந்தது.


    இதையடுத்து அதிகாரிகள் அந்த பார்சலை திறந்து பார்த்து சோதனையிட்டனர். அதனுள் கட்டி கட்டியாக புத்தம் புதிய தங்க கட்டிகள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். மொத்தம் 12 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூபாய் 5 கோடி. இதையடுத்து அதிகாரிகள் அந்த பார்சலையும் தங்கக்கட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள்

    அடுத்த செய்தி