Home /News /tamil-nadu /

ரேஷன் பொருள் வழங்கல் துறையின் 12 முக்கிய அறிவிப்பு...

ரேஷன் பொருள் வழங்கல் துறையின் 12 முக்கிய அறிவிப்பு...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில், 12 முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டார்.

    ரேஷன் பொருள் வழங்கல் துறையில் 12 முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் சக்கரபாணி இன்று வெளியிட்டுள்ளார்.

    கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்றது.

    இதில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதிலுரை வழங்கிய அமைச்சர் சக்கரபாணி 12 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அவை பின்வருமாறு -

    1.மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் /எடையாளர்களை தேர்வு செய்து பரிசு வழங்கப்படும்.

    மாநில அளவில் விற்பனையாளர்களுக்கு முதல் பரிசு 15000ரூபாய், இரண்டாம் பரிசு 10000 ரூபாய். மூன்றாம் பரிசு 5000 வழங்கப்படும். எடையாளர்களுக்கு முதல் பரிசு 10000 ரூபாய், இரண்டாம் பரிசு 6000 ரூபாய், மூன்றாம் பரிசு 4000 ரூபாய் வழங்கப்படும்.

    2. கொளத்தூர் மண்டல உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு ரூபாய் 2.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டடம் கட்டப்படும்.

    3. அஞ்சல் வழியாக புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகளின் இருப்பிடத்திற்கே அனுப்பப்படும்.

    இதையும் படிங்க - புனித ஹஜ் பயணம் செய்வோருக்கான புறப்பாட்டு தலமாக  சென்னையை மீண்டும் அறிவிக்க கோரி வழக்கு

    4. பொது வினியோகத் திட்டத்தின் மூலம் சிறுதானியங்கள் ( கேழ்வரகு ) வழங்கப்படும்.

    5. உணவு தானியங்கள் சேமிப்பதற்காக 12 வட்ட செயல்முறை கிடங்குகள் மொத்தம் 2800 மெ.டன் கொள்ளளவில் ரூபாய் 54 கோடி மதிப்பீட்டில் நபார்டு நிதி உதவியுடன் கட்டப்படும்.

    6. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான 260 கிடங்கு வளாகங்களில் புனரமைப்பு பணிகள் ரூபாய் 90 கோடி மதிப்பீட்டில் நபார்டு நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும்.

    இதையும் படிங்க - அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி வழங்க தமிழக அரசு தயார் - மு.க.ஸ்டாலின்

    7. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் முழுமையாக கணினிமயமாக்கப்படும்

    8. கான்கிரீட் தரை மற்றும் மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்புத் தளங்கள் மொத்தம் ரூபாய் 70.75 கோடி மதிப்பீட்டில் நபார்டு நிதி உதவியுடன் அமைக்கப்படும்

    9. திருவள்ளூர், பொள்ளாச்சி மற்றும் உத்தமபாளையம் ஆகிய இடங்களில் மறுபகிர்வு முறையில் 3 சிறப்பு சுற்றுக் காவல் படைகள் உருவாக்கப்படும்

    10. குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறைக்கு தனித்து இயங்கும் கண்காணிப்பு கேமராக்கள் வழங்கப்படும்

    இதையும் படிங்க: ஹேப்பி நியூஸ்...! ரேஷன் கார்டு இனி வீட்டுக்கே வந்துவிடும்


    11. தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் சொந்த நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் செலவில் கணிணிமயமாக்கப்படும்

    12. இராணிப்பேட்டை மற்றும் திருமங்கலம் சேமிப்பு கிடங்கு வளாகங்களில் காலியாக உள்ள இடத்தில் கூடுதலாக தலா 3400 மெ.டன் கொள்ளளவு கொண்ட புதிய சேமிப்பு கிடங்குகள் கட்டப்படும்.
    Published by:Musthak
    First published:

    Tags: Ration, Ration Shop, Smart ration card, TN Assembly

    அடுத்த செய்தி