• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • EIA 2020 வரைவு அறிக்கையை ஆய்வுசெய்ய 12 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு..

EIA 2020 வரைவு அறிக்கையை ஆய்வுசெய்ய 12 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு..

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை.

சுற்றுச்சூழல் தாக்கம் அறிக்கை (EIA) குறித்து ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.

  • Share this:
    இ.ஐ.ஏ. பற்றி ஆய்வு செய்ய குழு நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா குழுவிற்கு தலைமை வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Also read: 65 பிரபல பின்னணி பாடகர்கள் ஒன்றிணைந்து பாடிய ”தமிழா தமிழா”.. ட்விட்டரில் வெளியிட்டார் ஏ.ஆர். ரஹ்மான்..

    தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம், பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர், புவியியல் துறை இயக்குநர் உள்ளிட்ட 11 பேர் இதில் உறுப்பினர்களாக இருப்பர்.

    இந்தக் குழு சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையின் சாதக, பாதக அம்சங்களை ஆராய்ந்து தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும். மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கைக்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: