கோவையில் கொடூரம் - பிறந்தநாளுக்கு நண்பர்களுடன் சென்ற 11-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை - 4 பேர் கைது

கோவையில் கொடூரம் - பிறந்தநாளுக்கு நண்பர்களுடன் சென்ற  11-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை - 4 பேர் கைது
மாதிரிப் படம்.
  • Share this:
11-ம் வகுப்பு மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி, கடந்த 26-ம் தேதி, தனது நண்பருடன் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். அப்போது, மணிகண்டன் என்பவர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதை சக நண்பர்கள் செல்போனில் படம் பிடித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில், ராகுல்(21), பிரகாஷ்(22), கார்த்திகேயன்(28), நாராயண மூர்த்தி(30)  ஆகிய 4 பேரை, ஆர்.எஸ்.புரம் மகளிர் காவல்நிலைய போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர், போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மேலும், முக்கிய குற்றவாளியான மணிகண்டன் மற்றும் தலைமறைவான மற்றொரு இளைஞரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையில், 11-ம் வகுப்பு மாணவியிடம், இளைஞர்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. கூட்டுபாலியல் வன்கொடுமை என தகவல் வெளியான நிலையில் காவல்துறையினர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

 
First published: December 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...