முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 'உறவினர்கள், ஆசிரியர்கள் என யாரையும் நம்பக்கூடாது' கடிதம் எழுதிவிட்டு 11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

'உறவினர்கள், ஆசிரியர்கள் என யாரையும் நம்பக்கூடாது' கடிதம் எழுதிவிட்டு 11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

இந்த சமூகத்தில் பாதுகாப்பே இல்லை என்றும், பெண்களை மதிக்க ஒவ்வொரு பெற்றோரும் மகன்களுக்கு கற்றுத் தர வேண்டும் எனவும் அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார்.

இந்த சமூகத்தில் பாதுகாப்பே இல்லை என்றும், பெண்களை மதிக்க ஒவ்வொரு பெற்றோரும் மகன்களுக்கு கற்றுத் தர வேண்டும் எனவும் அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார்.

இந்த சமூகத்தில் பாதுகாப்பே இல்லை என்றும், பெண்களை மதிக்க ஒவ்வொரு பெற்றோரும் மகன்களுக்கு கற்றுத் தர வேண்டும் எனவும் அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார்.

  • Last Updated :

    பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்னையை அடுத்த மாங்காட்டில் 11-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

    தற்கொலைக்கு முன் மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த அந்த மாணவியின் தந்தை, தனியார் வங்கியில் பணியாற்றுகிறார். தாயார் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த சமயத்தில், வீட்டில் தனியாக இருந்த மாணவி, சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    தற்கொலைக்கு முன்பாக மாணவி எழுதியதாக கூறப்படும் கடிதத்தில், இதற்கு மேல தன்னால வாழ முடியாது என்றும், தனக்கு ஆறுதல் சொல்லக் கூட யாருமே இல்லை எனவும் அந்த மாணவி வேதனையுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ALSO READ |  விழுப்புரத்தில் கொடுமை... பசியால் தள்ளுவண்டியில் இறந்துகிடந்த 5 வயது சிறுவன்

    இந்த சமூகத்தில் பாதுகாப்பே இல்லை என்றும், பெண்களை மதிக்க ஒவ்வொரு பெற்றோரும் மகன்களுக்கு கற்றுத் தர வேண்டும் எனவும் அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார். உறவினர்கள், ஆசிரியர்கள் என யாரையும் நம்பக்கூடாது என்றும், தாயின் கருவறையும், கல்லறையும் தான் பாதுகாப்பான இடம் என்ற வார்த்தையுடன் முடியும் அந்த கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர். மாணவியின் உடலை கைப்பற்றிய மாங்காடு போலீசார் பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்துள்ளனர் .

    மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது யார்? தற்கொலைக்கான உண்மை காரணம் என்ன? என்பது குறித்து காவல்துறையின் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    top videos

      மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

      First published: