• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அனைவருக்கும் வீடு திட்டம்.. தமிழகத்தில் 1,152 வீடுகள்: அடிக்கல் நாட்டினார் பிரதமர்

அனைவருக்கும் வீடு திட்டம்.. தமிழகத்தில் 1,152 வீடுகள்: அடிக்கல் நாட்டினார் பிரதமர்

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

2022-ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

  • Share this:
    அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் தமிழகத்தில் கட்டப்படும் 1,152 வீடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ், 2022-ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் புதிய தொழில்நுட்பத்தில் வீடு கட்டும் திட்டத்துக்காக, பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில்,  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்மைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.

    பிரதமர் இன்று அடிக்கல் நாட்டியுள்ள திட்டத்தின்கீழ், தமிழகத்தில் கட்டப்படும் மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை 1, 152 ஆகும். இதன் மொத்த மதிப்பீடு ரூ.116 கோடியே 26 லட்சம். இதில் மத்திய அரசின் பங்கு ரூ.63 கோடியே 36 லட்சம். மாநில அரசின் பங்கு ரூ.35 கோடியே 62 லட்சம். பயனாளிகளின் பங்கீடு ரூ.17 கோடியே 28 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், குடிசை இல்லா தமிழகத்தை உருவாக்குவதற்கு மத்திய அரசின்  இந்தத் திட்டம் பெரிதும் துணைபுரியும் என்று கூறி, பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த நிகழ்வின்போது நன்றி தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: