நீலகிரியில் 112 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தகவல்

நீலகிரியில் 112 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தகவல்

மாதிரிப்படம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் 112 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் 112 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

  தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற இருக்கும் நிலையில், அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமான ஈடுபட்டு வருகின்றது.

  இந்நிலையில், நீலகிரியில் பதற்றமான வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவு நடைபெறுவதை மாவட்ட தேர்தல் அதிகாரி நேரடியாக கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அதிகாரி இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

  நீலகிரியில், தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 60 வழக்குகள் பதிவு செய்யபட்டுள்ளன. வாகன சோதனையில் 2 கோடி 46 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யபட்டுள்ளது. அடர்ந்த வன பகுதியில் உள்ள கிராம மக்கள் வாக்கு சாவடிகளுக்கு வர, அரசு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

  முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட வன விலங்கு நடமாட்டம் உள்ள கிராமங்களில் உள்ள வாக்காளர்கள் மாவோயிஸ்ட் தடுப்பு படையினர் மற்றும் வனத்துறையினரின் பாதுகாப்புடன் வாக்கு சாவடிகளுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

  Must Read :  தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதிக்கு பின் முழு ஊரடங்கா? ராதாகிருஷ்ணன் பதில்

   

  நாளை நடைபெறும் வாக்குப்பதிவைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: