தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த 110 மருத்துவர்களில் 43 பேருக்கு மட்டுமே நிவாரணம் அறிவிப்பு

மாதிரி படம்

தமிழ்நாட்டில் இது வரை 110 மருத்துவர்கள் இறந்துள்ளனர். அதில்  43 பேரின் குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரணத்தொகை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் இறுதி கட்டத்தில் உள்ளன.

  • Share this:
தமிழ்நாட்டில் முதல் மற்றும் இரண்டாவது அலையில் சுகாதாரப் பணியாளர்கள் உட்பட முன்களப் பணியாளர்கள் பலர் உயிரிழ்ந்துள்ளனர். கொரோனா பணியிலிருந்து உயிரிழந்த முன் களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் வழங்கும் என அறிவிக்கப்பட்டது.

நாட்டில் இது வரை 1500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் தமிழ்நாட்டில் இது வரை 110 மருத்துவர்கள் இறந்திருப்பதாகவும் இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ சங்க தரவுகள் படி முதல் அலையில் 57 மருத்துவர்களும் இரண்டாவது அலையில் 53 மருத்துவர்களும் உயிரிழ்ந்துள்ளனர்.

இரண்டாவது அலையில் உயிரிழந்தவர்களில் 43 பேர் ஆண்கள், 10 பேர் பெண்கள் ஆவர். இரண்டாவது அலையின் தொடக்கத்தில் மார்ச் மாதத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார். ஏப்ரல் மாதத்தில் எட்டு மருத்துவர்கள். மே மாதத்தில் 24 மருத்துவர்களும் ஜூன் மாதம் ஒன்பது மருத்துவர்கள் உயிரிழந்திருந்தனர். ஜூலை மாதத்தில் ஒரு மருத்துவர் உயிரிழந்துள்ளார்.

Also Read : கந்துவட்டி கொடுமையால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை: மனைவி கண்ணீர் புகார்!! 

60 வயது முதல் 69 வயதிலான பிரிவினரில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 80 முதல் 89 வயதில் எட்டு பேரும் 70 முதல் 79 வயதில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். 43 வயதில் ஒரு மருத்துவர் உயிரிழந்துள்ளார். இதில் சென்னையில் பத்து மருத்துவர்கள் தஞ்சையில் 4 மருத்துவர்கள், விருதுநகரில் 4 மருத்துவர்கள், தென்காசியில் 4 மருத்துவர்கள்,கோவையில் 3 மருத்துவர்கள் உயிரிழ்ந்துள்ளனர்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் விரைவில் கிடைக்கவுள்ளதாகவும் மற்றவர்களின் விண்ணபங்கள் தொடர்ந்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Also Read : மகளின் தோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது

மேலும் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு தலைவர் சி என் ராஜா கூறுகையில் " இது வரை உயிரிழந்த 110 மருத்துவர்களில் இரண்டு பேருக்கு தமிழக அரசின் 25 லட்ச நிவாரணத்தொகையும் ஆறு பேருக்கு மத்திய அரசின் 50 லட்ச நிவாரணத்தொகையும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சில குடும்பங்கள் தாய் தந்தை இருவரும் மருத்துவர்களாக இருந்து உயிரிழ்ந்துள்ளனர். இது போன்ற குடும்பங்கள் மிகவும் தவித்து வருவதால் அரசு அறிவித்த நிவாரணத்தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

இரண்டாவது அலையில் தமிழகத்தில் உயிரிழந்த மருத்துவர்கள் 53 ( கொரோனா அல்லாமல் இறந்தவர்கள் - 7 பேர்)

ஆண்கள் - 43

பெண்கள் -10

மாவட்டம் : சென்னை -10, தஞ்சை -4, விருதுநகர்-4, தென்காசி -4, கோவை-3, புதுக்கோட்டை -3, கடலூர்-2, சேலம்-2, திருச்சி-2, ஈரோடு-2, தேனி-2, மதுரை-2, திருப்புத்தூர் -2, கரூர்-2, விழுப்புரம்-1, திருப்பூர்-1, நாமக்கல்-1, சிவகங்கை -1, அரியலூர் -1, ராமநாதபுரம் -1, திண்டுக்கல் -1, கன்னியாகுமரி -1, வேலூர்-1

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vijay R
First published: