Home /News /tamil-nadu /

தமிழகத்தில் கொரோனா தொற்றால் 110 குழந்தைகள் பாதிப்பு.. 1933 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் கொரோனா தொற்றால் 110 குழந்தைகள் பாதிப்பு.. 1933 பேருக்கு கொரோனா தொற்று

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 236 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நேற்று 1933 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “ தமிழகத்தில் நேற்று புதிதாக 1லட்சத்து 58 ஆயிரத்து 935 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 100 குழந்தைகள் உட்பட1933 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதில் அதிகபட்சமாக கோவையில் 236 பேருக்கும், சென்னையில் 211 பேருக்கும் , ஈரோட்டில் 177 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12 வயதுக்குட்பட்ட 110 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 276 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 22 பேரும், தனியார் மருத்துவமனையில் 12 பேரும் என 34 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். தமிழகத்தில் இதுவரை 34,462 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1887 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Children, Corona positive, CoronaVirus, Covid-19, Tamilnadu

    அடுத்த செய்தி