முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தவறான சிகிச்சையால் 6-ம் வகுப்பு மாணவன் மரணம்: டாக்டர் தப்பியோட்டம்!

தவறான சிகிச்சையால் 6-ம் வகுப்பு மாணவன் மரணம்: டாக்டர் தப்பியோட்டம்!

சிறுவனின் சடலம்

சிறுவனின் சடலம்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

வேலூர் மாவட்டத்தில், தவறான சிகிச்சையால் 6-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்ததாகக் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம், ஆழ்வார்தாங்கல் கிராமத்தை சேர்ந்த தேவன் மகன் கரண்குமார். ஆறாம் வகுப்பு படித்து வந்த இவர், வயிற்று வலிக்காக, வேலூர் அரசு மருத்துவக் கல்லுாரி தலைமை மருத்துவர் அச்சுதானந்தன் நடத்தி வரும் கிளினிக்கில் சிகிச்சை பெற்றார். சிறுநீரகத்தில் கல் இருப்பதாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கரண்குமார் உடல்நிலை கவலைக்கிடமானது. அவரை மேல்விஷாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அச்சுதானந்தன் தனது காரிலேயே அழைத்துச் சென்றுள்ளார்.

அந்த மருத்துவமனையில் பரிசோதித்த போது மாணவன் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து மாணவனின் சடலத்தை மருத்துவர் மீண்டும் காரிலேயே கொண்டு வந்தபோது, தகவல் அறிந்த பொதுமக்கள், கார்ணாம்பட்டு அருகே திரண்டதால், காரை விட்டு விட்டு மருத்துவர் தப்பியோடிவிட்டார். மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

First published:

Tags: Dead, Protest, School boy, Vellore