கொசு விரட்டுவதற்காக போடப்பட்ட புகைமூட்டம்: இரு உயிரைப் பறித்த சோகம்

கொரோனா

சென்னை பல்லாவரத்தில் கொசுவிட்ட போடப்பட்ட புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்ட 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

 • Share this:
  கொசு விரட்ட புகை போட்டதால் மூச்சுத்திணறி புஷ்ப லக்ஷ்மி உயிரிழந்த நிலையில் தற்பொழுது எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த 11 வயது சிறுவன் விஷால் சற்று முன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பொண்ணி நகர் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம்(61). இவருடைய மனைவி புஷ்பா லஷ்மி(55.) இவர்களின் மகள் மல்லிகா மற்றும் மல்லிகாவின் 11 வயது மகன் விஷால் ஆகியோர் அந்த பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் தூங்குவதற்காக வீட்டை தாழிட்டுக் கொண்டு தூங்கியுள்ளனர். காலையில் வெகுநேரமாகியும் அவர்கள் வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது நான்கு பேரும் மயக்க நிலையில் இருந்துள்ளனர்.

  உடனே இதுகுறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் 4 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் புஷ்பா லட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் கவலைக்கிடமாக இருந்த மூன்று பேரையும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும் இது குறித்து சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதிக அளவு வீட்டில் கொசு இருந்ததால் அதை விரட்ட அடுப்புக்கரி வைத்து வீட்டுக்குள்ளே புகை போட்டதாகவும் அதனால் அதிக அளவு வீட்டுக்குள் புகை சூழ்ந்ததால் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  Published by:Karthick S
  First published: