• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • படிக்கச் சொல்லி கண்டித்த பெற்றோர்கள்... 11 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை - திருப்பூரில் சோகம்

படிக்கச் சொல்லி கண்டித்த பெற்றோர்கள்... 11 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை - திருப்பூரில் சோகம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

படிக்கச் சொல்லி பெற்றோர்கள் கண்டித்ததால் விஷால் என்ற 11 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து குப்பாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வீரகுமார்.  பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார்.  இவரது மனைவி விஜயகுமாரி ஆயிக்கவுண்டம்பாளையம் துவக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.  இவர்களுக்கு அவிநாசியில் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் விஷால் (11) மற்றும் அத்விக்குமார் (5) என இரு மகன்கள் உள்ளனர்.

விஷாலை நன்றாக படிக்கச் சொல்லி பெற்றோர்கள் அவ்வப்போது கண்டித்து வந்தனர். இந்நிலையில் இன்று பெற்றோர்கள் இருவரும் அவரவர் பணிக்குச் சென்றுள்ளனர். வீட்டில் விஷால் தனது தம்பியுடன் தனியாக இருந்துள்ளான். பெற்றோர்கள் கண்டித்ததில் மனமுடைந்த சிறுவன் விஷால் தனது தாயின் சேலையை வீட்டு விட்டத்து இரும்பு கம்பியில் ஸ்டூல் வைத்து ஏறி கட்டி அதில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளான்.



Also read... கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூல் என புகார் - தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை கோரி மனு

இதையடுத்து மதியம் உணவு வேளையில் வீடு திரும்பிய விஜயகுமாரி தனது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது கண்டு பேரதிர்ச்சியடைந்தார்.  சிறுவனின் பிரேதத்தை கைப்பற்றி அவிநாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.      பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த சிறுவன் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: