தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள், இலங்கைக் கடலில் அத்துமீறி நுழைந்ததாக இலங்கை கடற்படை அவர்களை கைது செய்துள்ளது.

Web Desk | news18
Updated: January 13, 2019, 8:13 AM IST
தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது
(கோப்பு படம்)
Web Desk | news18
Updated: January 13, 2019, 8:13 AM IST
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 11 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன் அவர்களிடம் இருந்த  2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து நேற்று காலை 2 விசைப் படகுகளில் 11 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கச்சத்தீவு அருகே இந்திய எல்லையில், மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது நெடுந்தீவுக்கு வட கிழக்கே லைட் ஹவுஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக குற்றம்சாட்டினர்.

இதனைத் தொடர்ந்து, அங்கு மீன் பிடித்த  11 மீனவர்களையும் கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களிடன் இருந்த 2 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

தமிழக மீனவர்களின் படகு (கோப்புப் படம்)


அதன் பிறகு அந்த  11 மீனவர்களையும் படகுகளுடன் காரை நகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பின்னர் 11 மீனவர்களும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also see... காவலரை தரதரவென இழுத்துச் சென்ற காளை
First published: January 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...