ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய மனு இன்று விசாரணை..!

திமுக மனு மீது சபாநாயகர் எடுத்த நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க உத்தரவு

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய மனு இன்று விசாரணை..!
ஓ.பன்னீர் செல்வம் (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: February 14, 2020, 9:18 AM IST
  • Share this:
ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில், எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம், செம்மலை உள்ளிட்ட 11 எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதனை எதிர்த்து திமுக சார்பில் கொறடா சக்கரபாணி, தங்க தமிழ்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் திமுக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.


இதையடுத்து, இந்த வழக்கு கடந்த 4-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகர் தாமதம் செய்தது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரத்தில் 3 ஆண்டுகள் தாமதம் என்பது தேவையற்றது என்று தெரிவித்த நீதிபதிகள், திமுக மனு மீது சபாநாயகர் எடுத்த நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க உத்தரவிட்டனர். இதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
 
First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading