அரசுக்கு எதிராக வாக்களித்த 11 சட்டமன்ற உறுப்பினர்களில் இருவரிடம் சபாநாயகர் விசாரணை

எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த 11 சட்டமன்ற உறுப்பினர்களில் முதற்கட்டமாக இரண்டு உறுப்பினர்களிடம் காணொலி காட்சி மூலமாக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் விசாரணை மேற்கொண்டார்.

  • Share this:
11 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்ய கோரும் வழக்கில், சபாநாயகர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவார் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதன் அடிப்படையில் சட்டப்பேரவை சபாநாயகர் தனபால், 11 உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொள்ளவுள்ளார். கொரோனா பாதிப்பு இருக்ககூடிய சூழல் என்பதால் காணொலி காட்சி மூலாக விசாரணை நடைபெற்றது.

முதற்கட்டமாக இன்று ஆவடி சட்டமன்ற உறுப்பினர் பாண்டியராஜன், மயிலாப்பூர் உறுப்பினர் நட்ராஜ் ஆகிய இரண்டு உறுப்பினர்களும் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் சோழிங்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பார்த்திபன் மனுதாரர் என்ற அடிப்படையிலும் விசாரணைக்கு காணொலிகாட்சி மூலமாக ஆஜராகினர்.

ALSO READ | தமிழகத்தில் இ-பாஸ் ஏன் கட்டாயம்? முதல்வர் பழனிசாமி விளக்கம்

சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் அவரது இல்லத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை, சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்றது.
வரும் நாட்களில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட்ட மற்ற சட்டமன்ற உறுப்பினர்களிடமும் சபாநாயகர் விசாரணை மேற்கொள்ளவுள்ளார்.
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading