முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டில் 11 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்.. பட்டியல் இதோ!

தமிழ்நாட்டில் 11 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்.. பட்டியல் இதோ!

தலைமை செயலகம்

தலைமை செயலகம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக நியமனம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் 11 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 30 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

செய்தி மக்கள் தொடர்பு துறையின் இயக்குனராக உள்ள ஜெயசீலன் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகன் செய்தி மக்கள் தொடர்பு துறையின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதலாக அவருக்கு சிறப்பு திட்ட அமலாக்கத்துறையின் இணை செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது, இரண்டும் அமைச்சர் உதயநிதி இலக்கா என்பது குறிப்பிடதக்கது.

திருப்பூர் மாநகராட்சி ஆணையராக உள்ள கிராந்தி குமார் பட்டி கோவை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார். பள்ளிக் கல்வித் துறைக்கு சிறப்புச் செயலாளராக ஜெயந்தி ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் இந்து அறநிலையத் துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். செங்கல்பட்டு சார் - ஆட்சியர் சஞ்சீவனா தேனி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார்.

வ. எண்மாவட்டம்ஆட்சியர்
1திருநெல்வேலிகார்த்திகேயன்
2தென்காசிரவிச்சந்திரன்
3விருதுநகர்ஜெயசீலன்
4கிருஷ்ணகிரிதீபக் ஜேக்கப்
5விழுப்புரம்பழனி 
6கன்னியாகுமரிஸ்ரீதர் 
7பெரம்பலூர்கற்பகம் 
8தேனிசஜ்ஜீவனா
9கோவைகிராந்தி குமார் பட்டி
10திருவாரூர்சாருஸ்ரீ
11மயிலாடுதுறைமகாபாரதி

First published:

Tags: District collectors, IAS Transfer, Tamilnadu