”எனது மரணத்திற்குக் காரணம் அவர்தான்..” கடிதம் எழுதிவைத்து 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை

கடித்தை கைபற்றிய போலிசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆசிரியர் ரவியை தேடிவருகின்றனர்.

”எனது மரணத்திற்குக் காரணம் அவர்தான்..” கடிதம் எழுதிவைத்து 10-ம் வகுப்பு மாணவர் தற்கொலை
தற்கொலை செய்த மாணவன்
  • News18
  • Last Updated: December 4, 2019, 7:40 AM IST
  • Share this:
தனது மரணத்திற்கு காரணம் பள்ளி ஆசிரியர் தான் என்று கடிதம் எழுதிவைத்து விட்டு பத்தாம் வகுப்பு மாணவர் ஒருவர் மதுரையில் தற்கொலை செய்துள்ளார்.

மதுரை மாவட்டம் தொட்டப்பாநாயக்கணூரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் பாலாஜி உசிலம்பட்டியில் உள்ள நாடார் சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  படித்து வந்துள்ளார் .

9 ம் வகுப்பு படித்த போது தனது பள்ளி கணித ஆசிரியர் ரவி நடத்திவந்த டியூசனில் படித்த பாலாஜி 10 ம் வகுப்பு டியூசன் வேறு இடத்தில் சேர்ந்துள்ளார் .


இதனால் கணித ஆசிரியர் ரவி பாலாஜியை தினமும் வெறுப்புடன் பார்த் தாகவும் , காரணம் இல்லாமல் திட்டி அடிப்பதாகவும் தனது பெற்றோரிடம் அடிக்கடி சொல்லி வந்துள்ளார்

ஆனால், பாலாஜியின் பெற்றோர் சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பிவைத்துள்ளனர் .ஆறு மாதங்களாக தொடர்ந்து இப்படியே சென்றுள்ளது . இந்நிலையில் கடந்த சனிக்கிழமை வழக்கமாக பள்ளிக்கு சென்ற பாலாஜியை கணிதப்பாடப்பிரின் போது ஆசிரியர் ரவி திட்டியதாக கூறப்படுகின்றது .

இதனால் மனமுடைந்த பாலாஜி பள்ளிமுடிந்து வீட்டிற்கு சென்ற நிலையில் யாருடனும் பேசாமல் இருந்துள்ளார் . இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் வெளியே சென்ற நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் .தகவலறிந்து வந்த உசிலம்பட்டி தாலுக்கா போலீசார் உடலை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பாலாஜியின் பையில் இருந்து அவரது பெற்றோர் கடிதம் ஒன்றை எடுத்துள்ளனர் அதில்

கணித ஆசிரியர் ரவி தான் தனது மரணத்திற்கு காரணம் அவரது கொடுமை தாங்க முடியாமல் தான் நான் இந்த முடிவை எடுப்பதாகவும் அவருக்கு தண்டணை பெற்று தர வேண்டும் என்றும் அனைவருக்கும் எனது இறுதி வணக்கம் என்று முடித்துள்ளார்

இந்நிலையில் கடித்தை கைபற்றிய போலிசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆசிரியர் ரவியை தேடிவருகின்றனர்.
First published: December 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading