பள்ளிக்கட்டணம் செலுத்தாத குற்றவுணர்வு.. ஆன்லைன் பாடங்களால் குவிந்த சுமை: 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை..

பள்ளிக் கட்டண பாக்கி இருந்த நிலையில் மறுபுறம் ஆசிரியர்களின் ஆன்லைன் வீட்டுப் பாடம் குவிந்ததால் மன உளைச்சலில் இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்கட்டணம் செலுத்தாத குற்றவுணர்வு.. ஆன்லைன் பாடங்களால் குவிந்த சுமை: 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை..
பள்ளிக் கட்டண பாக்கி இருந்த நிலையில் மறுபுறம் ஆசிரியர்களின் ஆன்லைன் வீட்டுப் பாடம் குவிந்ததால் மன உளைச்சலில் இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • News18 Tamil
  • Last Updated: September 16, 2020, 3:04 PM IST
  • Share this:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே செல்லப்பனேந்தலைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மகள் சுபிக்ஷா. மதுரை காமராஜர் சாலையிலுள்ள அரசு உதவி பெறும் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளியில் தொடர்ந்து முதன்மை மாணவியாக விளங்கிய சுபிக்ஷா, பேச்சுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு தனித்திறமைகளைக் கொண்டவராகவும் இருந்துள்ளார்.

ஆன்லைன் வகுப்பு தொடங்கிய காலத்திலிருந்தே ஆசிரியர்கள் தொடங்கிய வாட்ஸ்அப் குரூப்பில் அட்மினாக சுபிக்ஷாவை ஆசிரியைகள் நியமித்து, அவர் மூலம் பிற மாணவிகளுக்குப் பாடங்களைப் பகிர்வது,  பாடம் தொடர்பான அறிவிப்புகளை வெளிப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளைச் செய்து வந்துள்ளனர்.

துபாயில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றிய மாணவி சுபிக்ஷாவின் தந்தை சத்தியமூர்த்தி, கொரோனா காரணமாக நாடு திரும்பிய நிலையில், மொபைல்ஃபோனில் பாடங்களைப் படிப்பதால் தமக்கு சிறிதாக தெரிவதாகவும், கண் பிரச்னை ஏற்படுவதாகவும், டிவி ஒன்று வாங்கி வருமாறும் மகள் கூறியதைத் தொடர்ந்து, தான் சேமித்து வைத்திருந்த பணத்தில் பெரிய டிவி ஒன்றை சத்தியமூர்த்தி வாங்கி வந்துள்ளார். தனது மொபைலில் வரும் பாடத்தை அந்த தொலைக்காட்சி மூலமாக மிரரிங் செய்து படித்து வந்துள்ளார்.


Also read: சாதாரணமான போனிலும் இயங்கும் ஆன்லைன் வகுப்புகளுக்கான தனிச்செயலி (App) - அசத்தும் அரசுப்பள்ளி..

இந்த ஆண்டிற்கான பள்ளிக் கட்டணமாக 7,000 ரூபாய் செலுத்த வேண்டியிருந்த நிலையில், 3,000 ரூபாய் செலுத்தி புத்தகங்களை வாங்கி படித்து வந்துள்ளார். மீதமுள்ள 4,000 ரூபாய் நிலுவையில் இருந்துள்ளது. மறுபுறம், தினசரி பாடங்கள் அவருக்கு சுமையாக இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.



இதைத்தொடர்ந்து தனது ஆசிரியைக்கு வாட்ஸ்அப் மூலம், தான் வர முடியாத காரணம் குறித்து சுபிக்ஷா ஆடியோ மெசேஜ் அனுப்பியுள்ளார். அதற்கு ஆசிரியையும் பொறுமையாக வரும்படி கூறியுள்ளார். ஆனாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தாமல் பாடங்களைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தது மாணவியான சுபிக்ஷாவிற்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வீட்டின் கழிப்பறைக்குச் சென்று அங்கு தொங்கிக்கொண்டிருந்த கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் சுபிக்ஷா. அதுவரை தாய் தனலட்சுமி மற்றும் தம்பி சிபிராஜ் உடன் மகிழ்வாய் பேசிக்கொண்டிருந்த சுபிக்ஷா, நீண்டநேரம் கழிப்பறையிலிருந்து வெளியே வராத நிலையில் அவரது தம்பி சிபிராஜ் வெளியில் நின்று சுபிக்ஷாவை கிண்டல் செய்துள்ளார். அதற்கும் எந்த பதிலும் வராததால் சந்தேகம் அடைந்த தாய் தனலட்சுமி கதவைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது அங்கிருந்த சிறிய கயிற்றில் சுபிக்ஷா தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

பள்ளி பாடத்தில் மூழ்கிப் போய் சில மாதங்களாகவே குடும்பத்தாரின் நெருக்கத்திலிருந்து விலகி புத்தகப் புழுவாய் இருந்த அவர், இப்படி விபரீத முடிவெடுத்துள்ளார்.

இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் சகாய கனகத்திடம் கேட்டபோது, கட்டணம் தொடர்பாக எந்த அழுத்தமும் தரவில்லை என்றும்; 10-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்பில் எந்த திணிப்பும் செய்யவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading