ஜூன் 15-ம் தேதிக்குள் நிலைமை சீராகிவிடுமா - 10-ம் வகுப்பு தேர்வு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் கேள்வி

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

இந்தநிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கானத் தேர்வு ஜூன் 15-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    ஜூன் 15க்கு 10ம் வகுப்புத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்குள் நிலைமை சீராகிவிடுமா என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    தமிழகத்தில் ஜூன் 1-ம் தேதி 10-ம் வகுப்புத் தேர்வு நடைபெறும் என்று என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்தநிலையில், பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பு எதிர்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தநிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கானத் தேர்வு ஜூன் 15-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், ‘கொரோனா வைரஸ் காலத்தில் முறையான ஆலோசனையின்றி தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட 10ம் வகுப்புத் தேர்வுக்கு எதிர்ப்பு பலமானதும் ஜூன் 15க்கு தள்ளி வைத்துள்ளார்கள். இப்பொழுதும் குழப்பம்தான். அதற்குள் நிலைமை சீராகிவிடுமா?

    மாணவரும் பெற்றோரும் பதறாத வகையில் தம் திட்டத்தை அறிவிக்க வேண்டியது அரசின் கடமை’ என்று குறிப்பிட்டுள்ளார்.








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:
    Published by:Rizwan
    First published: