Home /News /tamil-nadu /

பப்ஜி விளையாட்டிற்காக ரூ.8 லட்சம் பணத்தை திருடி நண்பனின் அம்மாவிடம் கொடுத்த 10ம் வகுப்பு மாணவர்

பப்ஜி விளையாட்டிற்காக ரூ.8 லட்சம் பணத்தை திருடி நண்பனின் அம்மாவிடம் கொடுத்த 10ம் வகுப்பு மாணவர்

Pub G

Pub G

அடிக்கடி ரித்திஷ் வீட்டிற்கு விளையாட செல்லும் பரத்திடம், ரித்திஷின் அம்மா மெரீட்டா புஷ்பராணி பப்ஜி விளையாட அனுமதி வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

    பப்ஜி விளையாட்டிற்காக ரூ.8 லட்சம் பணத்தை திருடி நண்பனின் அம்மாவிடம் கொடுத்த விவகாரம் குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை வெள்ளாள தேனாம்பேட்டை முத்தையா தெருவை சேர்ந்த நட்ராஜன் - லஷ்மி தம்பதியினர் வெள்ளாள தேனாம்பேட்டையில் உள்ள பாபு தெருவில் காய்கறி கடை வைத்துள்ளனர். இவருடைய மகன் பரத் மற்றும் அதே பகுதியில் குடியிருக்கும் மெரீட்டா புஷ்பராணி - ராஜசேகர் தம்பதியினரின் மகன் ரித்திஷ் என்பவரும் நண்பர்கள் என சொல்லப்படுகிறது.

    அடிக்கடி ரித்திஷ் வீட்டிற்கு விளையாட செல்லும் பரத்திடம், ரித்திஷின் அம்மா மெரீட்டா புஷ்பராணி பப்ஜி விளையாட அனுமதி வாங்கி தருவதாக தவணை முறையில் ஐம்பதாயிரம், ஐம்பதாயிரமாக பணம் வாங்கியதாக கூறப்படுகிறது

    இந்த நிலையில் நட்ராஜ் - லஷ்மி கடையில் இருந்த ரூ8 லட்சம் காணாமல் போனதாக சென்னை தேனாம்பேட்டை இ3 காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரண்டு மாத காலமாக பிரச்சனை நிலவி வந்த நிலையில் தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

    Also read:  ‘தடுக்க முடியலைனா பாலியல் வன்புணர்வை என்ஜாய் பன்னுங்க’ - காங்கிரஸ் எம்.எல்.ஏ பேச்சால் சர்ச்சை

    இது தொடர்பாக முதற்கட்ட விசாரணையில் ரீட்டா புஷ்பராணியின் கணவர் ராஜசேகர் வணிகவரி பிரிவு ஒன்றில் இளநிலை உதவியாளராக பணி செய்து வருவதும் 10 வகுப்பு படித்துவரும் பரத்திடம் தவணை முறையில் ஐம்பதாயிரம் ஐம்பதாயிரமாக ரூ.3 லட்சம் வாங்கியதை ஒப்பு கொண்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் நம்பிக்கை மோசடி, பணத்தை ஏமாற்றுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    Published by:Arun
    First published:

    Tags: Crime | குற்றச் செய்திகள், PUBG

    அடுத்த செய்தி