ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லாததால் விரக்தி.. கூலித்தொழிலாளியின் மகனான 10-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை..

செய்துங்கநல்லூர் அருகே ஆன்லைனில் படிக்க செல்போன் வாங்கி தராததால் 10 வகுப்பு மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் வகுப்புக்கு செல்போன் இல்லாததால் விரக்தி.. கூலித்தொழிலாளியின் மகனான 10-ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை..
செய்துங்கநல்லூர் காவல்நிலையம்
  • Share this:
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகேயுள்ள அய்யனார்குளம் பட்டி, பத்திரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுடலைமணி விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகன் முருகப்பெ்ருமாள் அங்குள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.தற்போது கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது. ஆன்லைனில் படிப்பதற்கு வசதியாக செல்போன் வாங்கித் தருமாறு முருகப்பெ்ருமாள் தனது தந்தையிடம் கேட்டார். அதற்கு பணம் இல்லை என்று அவர் தந்தை கூறியதாக தெரிகிறது.

மேலும் படிக்க...சொத்துத் தகராறில் இரட்டைக்கொலை.. கைவிரலைக் கடித்ததால் கொலை செய்ததாக வாக்குமூலம்.. 4 பேர் கைது.. நடந்தது என்ன?இதனால் மனமுடைந்த மாணவர் முருகப்பெ்ருமாள் வீட்டில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஆன்லைன் வகுப்பிற்கு செல்ஃபோன் வாங்கித் தராததால் 10-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடைேயே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

-----------------------------------------------------------------------------------------------

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: October 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading